"கோச்சடையான் படம் விரைவில் ரீரிலீஸ்" -லதா ரஜினிகாந்த்
Mar 12, 2026, 08:00 IST
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ஜெய் நடிக்கும் ‘டெக்ஸ்லா’ என்ற படத்தின் பூஜை நடந்தது. யுவன் சங்கர் ராஜா இசை அமைக்க, கண்ணன் ரவி தயாரிக்கிறார். பூஜை முடிந்த பிறகு நிருபர்களிடம் பேசிய லதா ரஜினிகாந்த், `தமிழ் படவுலகில் புதுவிதமான கதைகள் வருவது ஆரோக்கியமான விஷயம். ரஜினிகாந்த், கமல்ஹாசன் இணைந்து நடிப்பது மிகவும் சிறப்பான ஒரு தருணம். இது அடுத்த தலைமுறையினருக்கு உத்வேகத்தை கொடுக்கும். இந்த விஷயம் ஒரு மைல்கல்லாக இருக்கும்.
அவர்கள் இருவரையும் நினைத்து நான் பெருமைப்படுகிறேன். இசை அமைப்பாளர் அனிருத் கதாநாயகனாக நடிப்பது என்பது அவரது தனிப்பட்ட விருப்பம். அவர் பன்முகத்திறமை கொண்ட ஒரு நபர். ‘ஜெய்லர் 2’ படத்துக்காக எல்லோரையும் போல் நானும் ஆவலுடன் காத்திருக்கிறேன். எனது மகள் சவுந்தர்யா ரஜினிகாந்தை நினைத்து பெருமைப்படுகிறேன். அவரது ‘வித் லவ்’ படம் வெற்றிபெற்றிருக்கிறது. அவர் இயக்கிய ‘கோச்சடையான்’ என்ற படம் மிகப்பெரிய முயற்சி.
அன்று அப்படத்துக்கான தொழில்நுட்பங்கள் தியேட்டர்களில் இல்லாமல் போனாலும், சமீபத்தில் நடந்த ஏஐ மாநாட்டில் ‘கோச்சடையான்’ படத்தின் காட்சிகள் திரையிடப்பட்டன. விரைவில் இப்படம் ரீ-ரிலீஸ் ஆகிறது’ என்றார்.