24 மணி நேரத்தில் அதிகம் பார்க்கப்பட்ட கோலிவுட் டிரைலர் - தி கோட் சாதனை
Aug 21, 2024, 14:17 IST
நடிகர் விஜய், இயக்குநர் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகி இருக்கும் படம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (தி கோட்). ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து இருக்கும் தி கோட் படத்தில் பிரசாந்த், பிரபு தேவா, அஜ்மல், மீனாட்சி சௌத்ரி மற்றும் பலர் நடித்துள்ளனர். தி கோட் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்று பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன. திரைப்படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த நிலையில், இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான நிலையில், தி கோட் படத்தின் தமிழ் மொழி டிரைலர் 24 மணி நேரத்தில் அதிக வியூஸ்களை பெற்ற கோலிவுட் டிரைலர் என்ற சாதனையை படைத்துள்ளது. தி கோட் படத்தின் டிரைலரை 24 மணி நேரத்தில் 3.3 கோடி பேர் பார்த்துள்ளனர்.மேலும், இதே காலக்கட்டத்தில் இந்த டிரைலருக்கு 1.2 கோடி லைக்ஸ் கிடைத்துள்ளன. இதுவரை இந்த டிரைலரை சுமார் 5 கோடிக்கும் அதிகமான வியூஸ்களை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.