×

முன்பதிவில் சாதனை புரியும் ரஜினியின் கூலி -எந்த நாட்டில் தெரியுமா ?

 
கூலி படம் மிகப்பிரமாண்டமாக தயாரிக்கப்பட்டு வருகிறது .இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் அமீர்கான், நாகர்ஜுனா, உபேந்திரா, செளபின் சாஹிர் என பல  நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.இப்படம் 1000 கோடி வசூலை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .இதை சன் பிச்சர்ஸ் தயாரிக்க லோகேஷ் கனகராஜ் இஅயக்கியுள்ளார் .விரைவில் ரிலீஸ் ஆகும் இப்படத்தின் டிக்கெட் முன் பதிவு நடைபெற்று வருகிறது 
தமிழர்கள் அதிகம் வாழும் நாடுகளில் மலேசியாவும் ஒன்று. அங்கும் கூலி படத்துக்கு மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு உள்ளது. இதன்காரணமாக மலேசியாவில் அப்படத்திற்கான முன்பதிவு படு ஜோராக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் ரிலீசுக்கு இன்னும் ஒரு வாரம் இருக்கும் நிலையில், தற்போதே மலேசியாவில், கூலி படம் முன்பதிவு மூலம் ரூ.1.6 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. இதனால் இதற்கு முந்தைய முன்பதிவு சாதனைகளை கூலி தகர்க்க அதிகம் வாய்ப்பு உள்ளது.
 தற்போது வரை மலேசியாவில் கூலி படத்திற்கு 25 ஆயிரம் டிக்கெட்டுகள் முன்பதிவு ஆகி உள்ளதாம். இதனால் முதல் நாளில் ரெக்கார்ட் பிரேக்கிங் கலெக்ஷன் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மலேசியா மட்டுமின்றி அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளிலும் கூலி படத்திற்கு செம டிமாண்ட் இருந்து வருகிறது.