'கூலி' படத்தில் ரஜினியுடன் இணையும் நட்சத்திரங்கள் யார்? ரசிகர்களுக்கு உற்சாக அறிவிப்பு...
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘கூலி’ படத்தின் கதாபாத்திரங்கள் இன்று மாலை முதல் அறிமுகப்படுத்த உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் ‘கூலி’. அனிருத் இசையமைத்து வரும் இப்படத்தில் நடிகர் சத்யராஜ், ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலர் நடித்து வருவதாக கூறப்படுகிறது. பொதுவாக லோகேஷ் கனகராஜின் படத்தின் அறிவிப்பு வீடியோவிற்கு விக்ரம் படம் முதல் எதிர்பார்ப்பு அதிகரித்தது.
அந்த ப்ரோமோ மூலம் கதையின் மையக்கருவை ரசிகர்கள் ஓரளவு தெரிந்து கொள்ளலாம். அந்த வகையில் விக்ரம் படத்தின் ப்ரோமோ வெளியானது முதல் அப்படத்திற்கு நல்ல விளம்பரமாக அமைந்தது. அதனைத்தொடர்ந்து வெளியான லியோ படத்தின் ப்ரோமோவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இதனை உறுதி செய்யும் வகையில், உபேந்திரா தனது சமூக வலைதள பக்கத்தில் ரஜினியுடன் கூலி படத்தில் நடிப்பது மகிழ்ச்சி என்ற புகைப்படத்தை பதிவிட்டிருந்தார். பின்னர் அந்த பதிவை நீக்கினார். இந்நிலையில் கூலி படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் அமீர் கானும் நடிப்பதாக தகவல் வெளியானது. இதனைத்தொடர்ந்து இன்று மாலை முதல் கூலி படத்தின் கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றாக வெளியிடப்படும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது ரஜினி ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.