×

'கொட்டுக்காளி' என்றால் என்ன? படம் குறித்த அனுபவங்களை பகிரும் படக்குழு..!

 

கடந்த 2022 ஆம் ஆண்டு இந்தியா சார்பில் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட கூழாங்கல் படத்தை இயக்கிய அறிமுக இயக்குநர் பிஎஸ் வினோத்ராஜ் தனது அடுத்த படைப்பாக கொட்டுக்காளி திரைப்படத்தை இயக்கியுள்ளார். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சூரி நடிப்பில் உருவாகி இருக்கும் இந்த படம் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு மக்களின் ஆதரவைப் பெற்றுப் பல விருதுகளையும் வென்றுள்ளது. இந்த படம்  ஆகஸ்ட் 23 ஆம் தேதி அன்று வெளியாக உள்ளது. சூரி, அன்னா பென் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி உள்ள 'கொட்டுக்காளி' திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி மக்களின் கவனத்தை பெற்றது. படத்தில் இசையமைப்பாளர் இல்லாதது படத்தின் எதிர்பார்ப்பை இன்னும் அதிகரித்துள்ளது.

<a href=https://youtube.com/embed/c_qrtaSdcIE?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/c_qrtaSdcIE/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" style="border: 0px; overflow: hidden;" width="640">

இந்நிலையில் இயக்குனர் பிஎஸ் வினோத்ராஜ், நடிகர் சூரி மற்றும் பிற நடிகர்கள் சூட்டிங் ஸ்பாட் அனுபவம் மற்றும் படத்தின் கதை  குறித்து பேசும் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. கொட்டுக்காளி என்பது தென் தமிழக பகுதிகளில் சாதாரணமாக புழக்கத்தில் உள்ள ஒரு வார்த்தைதான். ஒரு பெண் தனக்கு விருப்பமானதை செய்யும்போதும், அது ஊராருக்கு தவறாக தெரிந்தால் அந்த பெண்ணை அவர்கள் கொட்டுக்காளி என்று அழைப்பார்கள் என்று இயக்குனர் பிஎஸ் வினோத்ராஜ் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார். மேலும் இதுபோல சூரியும், நடிகை அன்னா பென் உள்ளிட்டோரும் படம் குறித்த தங்களது பார்வையை அந்த வீடியோவில்  பகிர்ந்துள்ளனர்.