×

சீனு ராமசாமியின் 'கோழிப்பண்ணை செல்லதுரை' படத்தின் அப்டேட் வந்தாச்சு..!

 

இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில் உருவாகி வரும் கோழிப்பண்ணை செல்லதுரை படத்தின் ரிலீஸ் தேதி மற்றும் டீசர் ஆக 14 ஆம் தேதி வெளியாகும் என அவர் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இயக்குநர் சீனு ராமசாமி தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க இயக்குநராக அறியப்படுபவர். இவரது தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை, தர்மதுரை, மாமனிதன் ஆகிய படங்கள் ரசிகர்கள் நல்ல வரவேற்பை பெற்றது. மாமனிதன் திரைப்படம், பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கு பெற்று பல விருதுகளை வென்றது.


இந்நிலையில் இவர் தற்போது 'கோழிப்பண்ணை செல்லதுரை' என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் அறிமுக நடிகர் ஏகன் மற்றும் யோகிபாபு இணைந்து நடிக்கின்றனர். விஷன் சினிமா ஹவுஸ் நிறுவன தயாரிப்பாளர் அருளானந்து தயாரிக்கும் இப்படத்திற்கு N.R.ரகுநந்தன் இசையமைத்துள்ளார். இதில், பிரிகிடா, ஐஸ்வர்யா தத்தா, தினேஷ் முத்தையா (அறிமுகம்), லியோ சிவகுமார், திருச்செந்தூர் ஶ்ரீராம் (அறிமுகம்), சத்யா (அறிமுகம்), மானஸ்வி, பவா செல்லதுரை மற்றும் பலர் நடித்துள்ளனர்.இந்நிலையில் இயக்குநர் சீனு ராமசாமி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், "அனைவரின் ஒத்துழைப்பில் நான் இயக்கிய கோழிப்பண்ணை செல்லதுரை திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மற்றும் டீசர் வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாகும் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்" என பதிவிட்டுள்ளார்.