×

ஹீரோவாக அறிமுகமாகும் KPY பாலா...!

 

சின்னத்திரையில் கலக்கி வந்த KPY பாலா தற்போது சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  


தனது நடிப்பு, நகைச்சுவை தன்மையுடன் அவரது திறமையை கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் மூலம் வெளிக்காட்டி பிரபலமானவர் KPY பாலா.
அதைத்தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கு பெற்று மக்கள் மனதில் நிறந்தர இடம் பிடித்தார். தனக்கென ஒரு முக பாவனை, உடலமைப்பு, கவுண்டர் வசங்களை பேசினார்.
நடிப்பு மட்டுமல்லாமல் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார் மேலும் இவரால் முடிந்த உதவியை பல மக்களுக்கு செய்து வருகிறார். அதைத்தொடர்ந்து ராகவா லாரன்சின் மாற்றம் அறக்கட்டளையின் மூலம் பொருளாதாரத்தில் பின் தங்கிய மக்களுக்கு உதவி செய்து வருகிறார்.