'குபேரா' போஸ்டர்.. வித்தியாசமான கெட்டப்பில் கவனம் பெறும் தனுஷ்...!
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா நடிக்கும் ’குபேரா’ போஸ்டர் விநாயகர் சதுர்த்தி நாளில் வெளியானது.
இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர்கள் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'குபேரா'. தமிழ், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் குபேரா திரைப்படம் வெளியாகிறது.
விஜய் நடித்த ’வாரிசு’ படத்தை தயாரித்த ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. குபேரா படத்திற்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார். சாய் பல்லவி நடித்த fidaa, love story உள்ளிட்ட படங்கள் மூலம் பிரபலமடைந்த இயக்குநர் சேகர் கம்முலா இயக்கும் படத்தில் தனுஷ் நடிப்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் குபேரா படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் தனுஷ் கவனம் பெறுகிறார். மேலும் இப்படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்நிலையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு குபேரா படக்குழு சிறப்பு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்த போஸ்டரில் மரியான் கெட்டப்பில் தனுஷ் உள்ளார். தனுஷ் நடித்து சமீபத்தில் வெளியான ராயன் பாக்ஸ் ஆபிஸில் வசூல் சாதனை படைத்தது. இதனைத்தொடர்ந்து குபேரா, இளையராஜா வாழ்க்கை வரலாறு படங்களில் தனுஷ் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.