கும்கி 2 படத்தின் மோஷன் போஸ்டர் வெளியானது!
Sep 11, 2025, 22:26 IST
பிரபு சாலமன் இயக்க இதற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்கிறார் இதன் அறிவிப்பை நடிகர் சிலம்பரசன் சமூக வலைதளங்களில் வெளியிட்டார்.
பிரபு சாலமன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, லட்சுமி மேனன், தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி படமாக அமைந்தது கும்கி திரைப்படம். யானைகளை வைத்து எடுக்கப்பட்ட இப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது மேலும் இப்படத்தின் மூலம் விக்ரம் பிரபு தமிழ் சினிமாவில் கதாநாயகனாகவும் அறிமுகமானார். டி.இமான் இசையில் வெளியான அனைத்து பாடல்களும் ஹிட் அடித்தது.