நியூ லுக்கில் கலக்கும் ‘குஷ்பு’- வைரலாகும் புகைப்படங்கள்.
Aug 26, 2023, 18:23 IST
90 களில் முன்னணி நடிகை அந்தஸ்தில் கொடி கட்டி பறந்தவர் நடிகை குஷ்பு. இவர் வெள்ளித்திரை, சின்னத்திரை என ஒரு ரவுண்டு வந்தவர் தற்போது அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் தனது சமூகவலைதள பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள நியூ லுக் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
முன்பை விட தற்போது இளமையாக இருக்கு குஷ்பூ அவ்வப்போது புகைப்படம் எடுத்து தனது சமூகவலைதள பகக்த்தில் பதிவிட்டு வருகிறார். இந்த நிலையில் லேட்டஸ்டாக ஷாட் ஹேரில் ஒரு அழகிய புகைப்படத்தை வெளியிட்டு இணையத்தை கலக்கியுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் என்ன குஷ்பு இதெல்லாம் என்பதுபோல கமெண்ட் செய்து வருகின்றனர். ஆனால் அவரது புகைப்படத்தை நன்கு பார்த்தால் அவர் விக் கடையில் இருப்பது தெரிகிறது. இதனால் இது விக்காக இருக்கலாம் என்றும் சிலர் கமெண்ட் செய்து வருகின்றனர்.