"சுந்தர் சி-க்கு அதை நேரடியாக சொல்ல தயக்கம் இருந்தது".-குஷ்பு வெளியிட்ட தகவல்
Aug 17, 2026, 06:00 IST
கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை முதலில் சுந்தர்.சி இயக்குவதாக இருந்தது. அவர் விலகிவிட்டார். இந்த மாற்றத்தில் தாம் வகித்த பங்கைப் பற்றியும் பேசிய குஷ்பு, ‘‘அவர் அந்தப் படத்தில் இருந்து விலகிய சமயத்தில், கமல் சார் டெல்லியில் இருந்தார். அந்த தகவலை நான் தான் அவரிடம் தெரிவித்தேன். கமல் சார், அவருக்கு (சுந்தர் சிக்கு) தயாரிப்பாளராக இருந்தாலும், எனக்கு அவர் ஒரு நெருங்கிய நண்பர். அதனால் அந்தச் செய்தியை அவரிடம் சொன்னேன். சுந்தர் சி-க்கு அதை நேரடியாக சொல்ல தயக்கம் இருந்தது. அதனால்தான் ஒரு நண்பராக நான் அந்த பொறுப்பை ஏற்றுக்கொண்டேன்” என்று கூறினார்.