×

ரசிகர்களை குழம்ப வைத்த குதிரைவால் படத்தின் டீஸர்!

“நீலம் புரொடக்ஷன்” தயாரிப்பு படங்களுக்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு உண்டு. பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு என இயக்குநர் பா.இரஞ்சித்தின் முந்தைய தயாரிப்புகள் ஏற்படுத்திய அதிர்வுகளே அதற்கு காரணம். அந்த வரிசையில், “யாழி பிலிம்ஸ்” தயாரிப்பில் கலையரசன், அஞ்சலி பாட்டீல் நடித்திருக்கும் “குதிரைவால்” படத்தை நீலம் வெளியிடுகிறது என்ற அறிவிப்பு வந்த்திலிருந்தே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழத் தொடங்கிட்டது. இந்நிலையில் “குதிரைவால்” படத்தின் டீசர் நேற்று வெளியானது. முற்றிலும் மாறுபட்ட
 

“நீலம் புரொடக்‌ஷன்” தயாரிப்பு படங்களுக்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு உண்டு. பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு என இயக்குநர் பா.இரஞ்சித்தின் முந்தைய தயாரிப்புகள் ஏற்படுத்திய அதிர்வுகளே அதற்கு காரணம்.

அந்த வரிசையில், “யாழி பிலிம்ஸ்” தயாரிப்பில் கலையரசன், அஞ்சலி பாட்டீல் நடித்திருக்கும் “குதிரைவால்” படத்தை நீலம் வெளியிடுகிறது என்ற அறிவிப்பு வந்த்திலிருந்தே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழத் தொடங்கிட்டது.

இந்நிலையில் “குதிரைவால்” படத்தின் டீசர் நேற்று வெளியானது. முற்றிலும் மாறுபட்ட ஜானரில் இருந்த டீசரை பார்த்துவிட்டு ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

இது அரசியல் படமா? அறிவியல் புனைவா? மேஜிக்கல் ரியாலிசம் என்றால் என்ன? என்று பல கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.

இதற்கு பதிலளித்த இயக்குநர்கள், “படம் நிச்சயம் புதிய அனுபவமாக இருக்கும். இது ஒரு வித்தியாசமான முயற்சி. இதற்கு உறுதுணையாக இருக்கும் பா.ரஞ்சித் சாருக்கு நன்றிகள்” என்று கூறினார்கள்.

நடிகர் கலையரசன், அஞ்சலிப்பாட்டில் முன்னணிக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அறிமுக இயக்குனர்கள் மனோஜ் லியோனல் ஜாசன் – ஷ்யாம் சுந்தர் ஆகியோர் இப்படத்தை இயக்கியிருக்கிறார்கள். இத்திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.