×

பிரபல விருது விழாவில் அங்கீகாரம் பெற்ற ‘குதிரைவால்’ திரைப்படம்… படக்குழு மகிழ்ச்சி!

கலையரசன் நடிப்பில் உருவாகியுள்ள ‘குதிரைவால்’ திரைப்படம் புகழ்பெற்ற விருதுவிழா ஒன்றில் ஒளிபரப்பு செய்ய தேர்வாகியுள்ளது. இயக்குனர் பா.இரஞ்சித் குதிரைவால் படத்தைத் தயாரித்துள்ளார். இப்படத்தில் நடிகர் கலையரசன், அஞ்சலி பாட்டில்(காலா பட நடிகை) ஆகியோர் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். அறிமுக இயக்குனர்கள் மனோஜ் லியோனல் ஜாசன் – ஷ்யாம் சுந்தர் ஆகியோர் இப்படத்தை இயக்கியிருக்கிறார்கள். ராஜேஷ் எழுதியிருக்கிறார். இப்படம் உளவியல், ஆள் மன கற்பனைகள், மற்றும் டைம் டிராவல் குறித்த ஒரு அறிவியல் புனைவுப்படமாகவும், வழக்கமான சினிமாவிலிருந்து
 

கலையரசன் நடிப்பில் உருவாகியுள்ள ‘குதிரைவால்’ திரைப்படம் புகழ்பெற்ற விருதுவிழா ஒன்றில் ஒளிபரப்பு செய்ய தேர்வாகியுள்ளது.

இயக்குனர் பா.இரஞ்சித் குதிரைவால் படத்தைத் தயாரித்துள்ளார். இப்படத்தில் நடிகர் கலையரசன், அஞ்சலி பாட்டில்(காலா பட நடிகை) ஆகியோர் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். அறிமுக இயக்குனர்கள் மனோஜ் லியோனல் ஜாசன் – ஷ்யாம் சுந்தர் ஆகியோர் இப்படத்தை இயக்கியிருக்கிறார்கள். ராஜேஷ் எழுதியிருக்கிறார். இப்படம் உளவியல், ஆள் மன கற்பனைகள், மற்றும் டைம் டிராவல் குறித்த ஒரு அறிவியல் புனைவுப்படமாகவும், வழக்கமான சினிமாவிலிருந்து மாறுபட்டதாகவும் , மேஜிக்கல் ரியாலிச சினிமாவாக இருக்கும் என்று கூறப்படுகின்றது.

‘குதிரைவால்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது.படத்தின் போஸ்டர் பல ஹிடன் சீக்ரட்களைக் கொண்டிருந்தது. தற்போது குதிரைவால் படம் புகழ்பெற்ற மும்பை திரைப்பட விருது விழாவில் திரையிட தேர்வு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த விருது விழாவில் மொத்தமே ஐந்து இந்தியப் படங்கள் தான் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அதில் குதிரைவால் படமும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.