×

“மதம், நம்பிக்கைய மனசுல வை; மனிதநேயத்த அதுக்குமேல வை”- டேக் ஓகே அப்பா…. ‘லால்சலாம்’ டப்பிங்.

 

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில், விஷ்ணு விஷால், விக்ராந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் படம் ‘லால் சலாம்’ இந்த படத்தின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கேமியோ ரோல் செய்துள்ளார். கிரிக்கெட்டை மைய்யமாக வைத்து தயாராகிவரும் இந்த படத்தின் படப்பிடிப்பு பல கட்டங்களாக நடந்து முடிந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது.

இந்த நிலையில் அதன் ஒரு பகுதியாக டப்பிங் பணிகள் சமீபத்தில் துவங்கியது. குறிப்பாக ரஜினிகாந்தின் கதாப்பாத்திரமான மொய்தீன் பாய்க்கு அவரே டப்பிங் பேசியுள்ளார். இதனை தயாரிப்பு நிறுவனம் தங்கள் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.  அதில் டப்பிங் ஸ்டுடியோவிற்குள் மாஸ்ஸாக எண்ட்ரி கொடுக்கும் ரஜினி கம்பீரமாக “மதம், நம்பிக்கைய மனசுல வை; மனிதநேயத்த அதுக்குமேல வை அது தான் நம்ம நாட்டோட அடையாளம்” என பேசியுள்ளார். அதற்கு இயக்குநரான ஐஸ்வர்யா ‘டேக் ஓகே அப்பா….” என கூறுகிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.