×

வீரமங்கை வேலு நாச்சியார் கதாபாத்திரத்தில் நடிக்கப்போகும் லேடி சூப்பர்ஸ்டார் !

தமிழ் சினிமாவில் நாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களாக பார்த்து கவனமாக தேர்ந்தெடுத்து நடிப்பவர் நடிகை நயன்தாரா. தற்போது அண்ணாத்த, நெற்றிக்கண், காது வாக்குல ரெண்டு காதல், உள்ளிட்ட படங்களை அடுத்தடுத்து கமிட் செய்துள்ள நடிகை நயன்தாரா, அவற்றைத்தொடர்ந்து 17ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ் வீரமங்கை வேலு நாச்சியாரின் வரலாற்று கதையில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகை நயன்தாரா கடைசியாக சைரா நரசிம்ம ரெட்டி என்ற வரலாற்று கதையில் நடித்திருந்தார். அதன்பிறகு தற்போது வீரமங்கை வேலு
 

தமிழ் சினிமாவில் நாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களாக பார்த்து கவனமாக தேர்ந்தெடுத்து நடிப்பவர் நடிகை நயன்தாரா.

தற்போது அண்ணாத்த, நெற்றிக்கண், காது வாக்குல ரெண்டு காதல், உள்ளிட்ட படங்களை அடுத்தடுத்து கமிட் செய்துள்ள நடிகை நயன்தாரா, அவற்றைத்தொடர்ந்து 17ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ் வீரமங்கை வேலு நாச்சியாரின் வரலாற்று கதையில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நடிகை நயன்தாரா கடைசியாக சைரா நரசிம்ம ரெட்டி என்ற வரலாற்று கதையில் நடித்திருந்தார். அதன்பிறகு தற்போது வீரமங்கை வேலு நாச்சியாரின் வாழ்க்கை வரலாற்றில் நடிக்க உள்ளார். இந்த திரைப்படத்தை இயக்குனர் சுசி கணேசன் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.

17ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்களை எதிர்த்து சுதந்திரத்திற்காக போராடியவர் வேலு நாச்சியார். இவர் கல்வி, விளையாட்டு, சிலம்பம் வாள் வீச்சு, ஈட்டி எறிதல், அம்பு எறிதல், குதிரையேற்றம், யானையேற்றம் போன்ற கலைகள் அனைத்தையும் படித்தவர். அவரை திரையில் பிரதிபலிக்கும் கதாபாத்திரத்தில் தற்போது நடிகை நயன்தாரா நடிக்க உள்ளதால், அவரும் இது போன்ற கலைகளை விரைவில் கற்றுகொள்ளவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொதுவாக வரலாற்று கதைகளில் நடிகை அனுஷ்கா தேர்ந்தெடுக்கப்படுவார். ஆனால் இந்த முறை லேடி சூப்பர் ஸ்டாராக இருக்கும் நயன்தாரா படத்தில் நடிக்க தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த படம் உறுதியாகும் பட்சத்தில் நயன்தாராவுக்கு இப்படம் தனது சினிமா பயணத்தில் ஒரு முக்கிய திருப்பமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.