×

மொய்தீன் பாய் ஆட்டம் ஆரம்பம்... 'லால் சலாம்' ரஜினி லுக் போஸ்டர் ரிலீஸ் ! 

 

 'லால் சலாம்' படத்தில் ரஜினிகாந்த் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் திரைப்படம் 'லால் சலாம்'. இந்த படத்தை அவரது மகள் ஐஸ்வர்யா இயக்கி வருகிறார். கிரிக்கெட் கதைக்களத்தை கொண்டு உருவாகும் இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்‌.ரகுமான் இசையமைத்து வருகிறார். 

 

இந்த படத்தில் நடிகர்கள் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இவர்களுடன் காமெடி நடிகர் செந்தில், தம்பி ராமையா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு செஞ்சி, திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்றுள்ளது.

இதையடுத்து அடுத்தக்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் மும்பையில் தொடங்கியது. இந்த படப்பிடிப்பில் கலந்துக் கொள்வதற்காக நடிகர் ரஜினிகாந்த் இன்று மும்பை சென்றார். அவர் நடிக்கும் காட்சிகள் நாளை முதல் படமாக்கப்பட உள்ளது. இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் இப்படத்தின் கேரக்டர் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. அதில் மொய்தீன் பாயாக கலக்கலான லுக்கில் இருக்கிறார். இந்த போஸ்டர் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.