கனவில் கூட கிடைத்திடாத வாய்ப்பு... ரஜினியுடன் நடித்தது குறித்து விஷ்ணு விஷால் விஷால் நெகிழ்ச்சி !
'லால் சலாம்' படத்தில் ரஜினியுடன் நடித்தது குறித்து நெகிழ்ச்சி பதிவு ஒன்றை நடிகர் விஷ்ணு விஷால் பதிவிட்டுள்ளார்.
ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா இயக்கும் திரைப்படம் ‘லால் சலாம்’. இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிகர்கள் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். கிரிக்கெட் கதைக்களத்தை கொண்டு உருவாகும் இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தில் தனது பகுதி படப்பிடிப்பை நடிகர் ரஜினிகாந்த் நேற்று நிறைவு செய்தார். இதையொட்டி படக்குழுவினருடன் நடிகர் ரஜினிகாந்த் கேக் வெட்டிக் கொண்டாடினார்.
இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் நடித்தது குறித்து நடிகர் விஷ்ணு விஷால் நெகிழ்ச்சி பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் நிறைய பேர் என்னை கீழே தள்ள பார்த்தார்கள். சில பேர் தங்களது சுயநல காரணத்திற்காக மிகவும் தாழ்ந்து போனார்கள். சமூக வலைதளத்தில் நான் ஏதேனும் பதிவிட்டால் அதை குறை சொல்லி மற்றவர்களை நம்ப வைக்கின்றனர். இதனால் என்னால் பணியாற்ற முடியாது என்று நினைக்கின்றனர். ஆனால் இந்த விஷயங்கள் அனைத்து என்னை மேலும் மேலும் உயர்த்தி வருகிறது.
அதற்கான ஆதாரம் தான் 'லால் சலாம்' படத்தில் சூப்பர் ஸ்டாருடன் நடித்துள்ளேன். இது எளிதாக கிடைத்து விடவில்லை. பல வருட நேர்மை மற்றும் கடின உழைப்பு என்னை இந்த நிலைக்கு கொண்டு வந்துள்ளது. நான் 'லால் சலாம்' படத்தில் சூப்பர் ஸ்டாருடன் இணைந்து நடிப்பேன் என்று கனவில் கூட நினைத்ததில்லை. படப்பிடிப்பின் போது நான் பெருமையான நினைக்கும் தருணம் உங்களிடமிருந்து கிடைத்த பாராட்டுக்கள் தான்.
மொய்தீன் பாய்க்கான படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளது. எல்லா தடைகளை தாண்டி நான் உயர்ந்து கொண்டே இருப்பேன். நான் செய்வதில் உண்மை இருக்கிறது. 'லால் சலாம்' திரைப்படம் வெளியாகும் போது உங்களுக்கு தெரியும் என்று கூறியுள்ளார்.