×

பொங்கல் ரேசிலிருந்து பின் வாங்கிய லால்சலாம்? என்ன காரணம் தெரியுமா.....

 

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தயாராகி வரும் ‘லால்சலாம்’ படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

லைக்கா நிறுவன தயாரிப்பில், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தயாராகியுள்ள படம் ‘லால்சலாம்’. கிரிக்கெட் விளையாட்டை மைய்யமாக வைத்து தயாராகியுள்ள இந்த படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். மொய்தீன் பாய் எனும் கதாப்பாத்திரத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த கேமியோ ரோல் செய்துள்ளார். படத்தின் படப்பிடிப்பு பல கட்டங்களாக மும்பை, சென்னை, திருவண்ணாமலை, புதுச்சேரி ஆகிய ஊர்களில் நடந்து முடிந்துள்ளது. படம் வரும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என அறிவிப்பு வெளியான நிலையில் தற்போதைய தகவலாக அதில் மாற்ற உள்ளதாக தகவல் வந்துள்ளது.

அதற்கு காரணம் பொங்கல் ரேசில் சிவகார்த்திகேயனின் ‘அயலான்’,  விஜய் சேதுபதியின் ‘மெரி கிறிஸ்துமஸ்’, தனுஷின் ‘கேப்டன் மில்லர்’ இவை நான்கும் பெரிய பட்ஜெட் படம் என்பதால் தியேட்டர் ஒதுக்குவதில் சிக்கல் உள்ளது. அதனை கருத்தில் கொண்டுதான் லால் சலாம் பொங்கல் ரேசிலிருந்து விலகி ஜனவரி 26க்கு ரிலீஸ் தேதியை மஆற்ற உள்ளதாக தகவல் வந்துள்ளது.