ரஜினி அரசியலுக்கு வராதது வருத்தம் - லதா ரஜினிகாந்த்
இந்தியாவே திரும்பி பார்க்கும் நடிகராக இருபவர் நடிகர் ரஜினிகாந்த். ஒரு சாதாரண நடத்துனராக தொடங்கிய இவரின் வாழ்க்கை பயணம் பல சாதனைகளை செய்து சூப்பர் ஸ்டாராக மாற்றியுள்ளது. தன்னுடைய ஸ்டைலான நடிப்பால் மொத்த இந்தியாவையே கட்டிப்போட்டுள்ளார்.இவர் கடந்த 1990 முதலே அரசியலுக்கு வர வேண்டுமென சொல்லப்பட்டு வந்தது. அதற்கு ஏற்றபடி திரைப்படங்கள் மற்றும் சினிமா நிகழ்ச்சிகளில் அரசியல் சார்ந்து ரஜினி பேசி வந்தார். இதைத் தொடர்ந்து ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார் என்ற எதிர்பார்ப்பும் நிலவியது. கடந்த 2017-ம் ஆண்டு ஆன்மிக அரசியல் செய்வேன் என பேசியிருந்தார். பின்னர் 2021-ம் ஆண்டு அரசியலில் ஈடுபடும் திட்டம் இல்லை என சொல்லி ரஜினி மக்கள் மன்ற அமைப்பை அவர் கலைத்தார். இது ரஜினி ரசிகர்கள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், ரஜினியின் மனைவி லதா ரஜினிகாந்த், தனது கணவர் அரசியலுக்கு வராதது ஏன் என்பது குறித்து பேசியுள்ளார். அதன்படி, ரஜினி அரசியலுக்கு வராதது வருத்தம்தான் எநக்கு. ஏனெனில் அவரை நான் ஒரு தலைவராக பார்த்தேன். அவர் சிறந்த தலைவர் என தெரிவித்துள்ளார்.