லெஜண்ட் சரவணன் நடித்துள்ள ‘லீடர்’எப்போது ரிலீஸ் தெரியுமா ?
Apr 1, 2026, 08:00 IST
பிரதீப் ரங்கநாதனின் ‘எல்ஐகே’ படம் ரிலீசாவதில் மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பிரதீப் ரங்கநாதன், கிரித்தி ஷெட்டி, எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ள படம் ‘எல்ஐகே’. நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவன் இந்த படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு ஒரு வருடம் முன்பே முடிந்துவிட்டது. ஆனால் படம் இதுவரை வெளியாகவில்லை. விஎஃப்எக்ஸ் காட்சிகளுக்கு அதிக செலவாகி வருவதால் படத்துக்கு பிரச்னை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பலமுறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு, தள்ளிப்போனது. இதற்கிடையே வரும் ஏப்ரல் 3ம் தேதி படம் திரைக்கு வரும் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
ஆனால் இப்போது 3ம் தேதியும் படம் வராது என தகவல் வெளியாகியுள்ளது. படத்துக்கான இறுதிகட்டப் பணிகள் இதுவரை முடியாமல் உள்ளதாம். இதனால் சென்சாருக்கும் படத்தை அனுப்பவில்லை. \இந்த படம் வருவதால், லெஜண்ட் சரவணன் நடித்துள்ள ‘லீடர்’, பரத் நடித்துள்ள ‘காளிதாஸ் 2’ படங்கள் ஏப்ரல் 10ம் தேதிக்கு ரிலீஸ் தேதியை அறிவித்து இருந்தன. இப்போது ‘எல்ஐகே’ தள்ளிப்போவதால், ‘லீடர்’, ‘காளிதாஸ் 2’ இரு படங்களுமே ஏப்ரல் 3ம் தேதியே திரைக்கு கொண்டு வர முடிவாகியுள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.