☰
×

கங்கை அமரனும், ரோஜாவும் நடிக்கும் லெனின் பாண்டியன் -பட விமர்சனம் 

 

மணல் கொள்ளைக் கும்பலால் தான் ஆசையாக வளர்த்த ஆட்டை இழந்த விவசாயி கங்கை அமரன், மணல் கொள்ளை பற்றி புகார் கொடுக்க, இதனால் அவரது உயிருக்கு ஆபத்து வர, அவருடைய பாதுகாப்புக்காக ஒரு போலீஸ்காரரை நீதிமன்றம் அவருக்கு வழங்குகிறது. அப்படி போலீஸாக நியமிக்கப்படும் நபர்தான் கதாநாயகன் தர்ஷன். அதற்குப் பிறகு இந்தக் கதையில் என்னென்ன நடந்தது என்பதுதான் மீதி படம்.

கதாநாயகன் தர்ஷன் கணேசன் தன்னுடைய முதல் படத்திலேயே அழுத்தமான நடிப்பை வெளிக்காட்டியுள்ளார். அப்பாவியான விவசாயி மற்றும் அவரது மனைவி கதாபாத்திரத்தில், கங்கை அமரனும், நடிகை ரோஜாவும் அவர்களுடைய அனுபவத்தை நடிப்பில் காட்டியுள்ளனர். ஷ்ரீதா ராவ், ஆடுகளம் நரேன், யுகேந்திரன், போஸ் வெங்கட், ஜார்ஜ் மரியன், அர்ச்சனா மற்றும் சுப்பு பஞ்சு ஆகியோரும் சிறப்பாக நடித்துள்ளனர்