×

இளையராஜா இசையில் லெனின் பாண்டியன் -எப்போது ரிலீஸ் தெரியுமா ?

 

டி.ஜி.தியாகராஜன் வழங்கும் சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் செந்தில் தியாகராஜன், அர்ஜூன் தியாகராஜன் இணைந்து தயாரித்துள்ள ‘லெனின் பாண்டியன்’ என்ற படம், வரும் 25ம் தேதி திரைக்கு வருகிறது. டி.டி.பாலச்சந்திரன் எழுதி இயக்கியுள்ளார். இளையராஜா இசை அமைத்துள்ளார். தர்ஷன் கணேசன், கங்கை அமரன், ரோஜா, ஸ்ரித்தா ராவ் நடித்துள்ளனர். மணல் கொள்ளையை மையமாக வைத்து, நம் மண்ணின் வாழ்வியலையும் மற்றும் எளிய மக்களின் உரிமைகளையும் பற்றி பேசும் அழுத்தமான படைப்பாக இது உருவாகியுள்ளது.

இப்படம் சம்பந்தமான நிகழ்ச்சியில் படக்குழுவினருடன் ரேகா, ஒய்.ஜி.மகேந்திரன், டி.ஏ.அருள்பதி, ஜி.தனஞ்செயன், டி.சிவா, சுப்பு பஞ்சு, சுஜாதா விஜயகுமார், அர்ச்சனா, பி.வாசு, இளவரசு, ஆர்.கண்ணன், பத்ரி வெங்கடேஷ் கலந்துகொண்டனர்.