×

THE EAGLE IS COMIN’  ‘லியோ’வில் இணைந்த ‘கமல்’ – போஸ்ட் போட்டு அறிவித்த டைரக்டர்.

 

தளபதி விஜய் நடித்து வரும் ‘லியோ’ திரைப்படம் லோகேஷின் LCUவாக அமைகிறதா? என்ற கேள்வியை ரசிகர்கள் தொடர்ந்து கேட்டு வருகின்றனர். இந்த நிலையில் படத்தின் ஆர்ட் இயக்குநர் வெளியிட்டுள்ள பதிவு அதற்கான பதிலாக அமைந்துள்ளது.

லோகேஷ்- கமல்ஹாசன் கூட்டணியில் வெளியான திரைப்படம் ‘விக்ரம்’. பிளாக் பஸ்டர் ஹிட்டான இந்த படம் கமலுக்கு மிகப்பெரிய கம் பேக்காக அமைந்தது. இந்த படத்தில் கமலை கழுகுடன் ஒப்பிட்டு ‘த ஈகிள் இஸ் கம்மிங்’ என மாஸ்ஸான பாடல் அமைக்கப்பட்டிருந்தது. இதனை வைத்துதான் தற்போது ‘லியோ’ படத்தின் கலை இயக்குநரான சதீஸ்குமார் பதிவு ஒன்றை போட்டுள்ளார்.

அதாவது கழுகு படம் ஒன்றை போட்டுள்ளார் அதில்,  THE EAGLE IS COMIN’  என்ற வரிகள் இடம்பெற்றுள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் இவர் மறைமுகமாக கமல் ‘லியோ’ படத்தில் இணைந்துள்ளதைதான் இப்படி கூறியுள்ளார்,  என கருத்து பகிர்ந்து வருகின்றனர். அப்படியென்றால் இது நிச்சயம் லோகேஷின் LCUவாகதான் இருக்கும். இந்த தகவல் தற்போது இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.