அர்ஜூன் கேரக்டரை வெளியிட்டு டிரைலருக்கு ஹைப் கொடுத்த ‘லியோ’ படக்குழு.
விஜய்யின் ‘லியோ’ படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியான வண்ணம் உள்ள நிலையில் தற்போது படத்தில் அர்ஜூன் கதாப்பாத்திரத்திற்கான புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது.
அதில் புகைப்பிடித்தப்படி மிரட்டும் வகையில் மாஸ்ஸாக அமர்ந்துள்ளார் அர்ஜூன். அந்த போஸ்டரில் லியோ படத்தின் டிரைலர் நாளை வெளியாகும் என குறிப்பிட்டு ரசிகர்களின் எதிர்பார்பை எகிற வைத்துள்ளனர் படக்குழுவினர்.