×

இணையத்தில் கசிந்த ‘லியோ’ அப்செட்டான படக்குழு.

 

விஜய்யின் மாஸ்ஸான அதிரடி ஆக்ஷனில் இன்று வெளியான லியோ படம் சட்டவிரோதமாக இணையத்தில் கசிந்துள்ளது.  இது படக்குழுவினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

த்ரிஷா, சஞ்சய் தத், மிஸ்கின், அர்ஜுன், சாண்டி மாஸ்டர், ப்ரியா ஆனந்த், கௌதம் மேனன் ஆகியோரது நடிப்பில் இன்று வெளியான லியோ படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. படத்திற்கு அமோக ஆதரவு கிடைத்துள்ள நிலையில் லியோ படக்குழுவுக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக ஒரு விஷயம் நடந்துள்ளது. அதாவது லியோ படம் காலை 9மணிக்கு தமிழகத்தில் ரிலீஸ் ஆன நிலையில் மற்ற மாநிலங்களில் அதிகாலை 4மணி, 5மணி காட்சிகள் திரையிடப்பட்டன.

இந்த நிலையில் தமிழகத்தில் ஒரு காட்சிதான் வெளியான நிலையில் படத்தின் HD பதிப்பு தமிழ் ராக்கர்ஸ், டெலிகிராம், டொரென்ட், மூவிரூல்ஸ் உள்ளிட்ட இணையதளங்களில் சட்ட விரோதமாக வெளியாகியுள்ளது. இது படக்குழுவுக்கு அதிர்ச்சியையும், கடும் தலைவலியையும் ஏற்படுத்தியுள்ளது.