×

‘லியோ’ படத்தின் காஷ்மீர் ஷூட்டிங் நிறைவு.. சென்னை திரும்பிய படக்குழுவினர் !

 

 விஜய் நடிப்பில் உருவாகும் ‘லியோ’ படத்தின் காஷ்மீர் படப்பிடிப்பு நிறைவுபெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தி விஜய் நடிப்பில் உருவாகும் படம் ‘லியோ’. வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்திற்கு தென்னிந்திய சினிமாவில் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதேபோன்று இந்த படத்திலிருந்து நாளுக்கு நாள் வெளியாகும் அப்டேட்டுகள் ரசிகர்களை வியப்படைய வைத்துள்ளது. அதனால் இந்த படம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர். 

இந்த படத்தில் விஜய்யின் ஹேர்ஸ்டைல் மற்றும் வித்தியாசமான தோற்றம் ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் தொடங்கியது. இந்த படப்பிடிப்பில் திரிஷா, சஞ்சய் தத், மிஷ்கின், கௌதம் மேனன் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர். இவர்களின் முக்கியமான ஆக்ஷன் காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டுள்ளது. பனி படர்ந்த பகுதியில் படப்பிடிப்பு நடைபெற்று வருவதால் அதி நவீன கேமிராக்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. 

500-க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப கலைஞர்கள் பணியாற்றும் இந்த படத்தின் படப்பிடிப்பு நீண்ட நாட்களாக காஷ்மீரில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் காஷ்மீர் படப்பிடிப்பு நேற்று நிறைவுபெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையொட்டி நேற்று நடிகர் விஜய் மட்டும் முதலில் சென்னை திரும்பினார். இது குறித்து வீடியோ வெளியாகி வைரலானது. இதையடுத்து மற்ற படக்குழுவினரும் தற்போது சென்னை திரும்பியுள்ளனர். 

காஷ்மீர் படப்பிடிப்பிற்கு பிறகு சென்னை, ஐதராபாத் மற்றும் மூணார் ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. ஐதராபாத் படப்பிடிப்பிற்காக ஏர்போர்ட் போன்ற செட் ஒன்று அமைக்கப்பட்டு வருகிறது. சிறிய இடைவெளிக்கு பிறகு சென்னையில் படப்பிடிப்பு தொடங்குகிறது. இதைத்தொடர்ந்து ஐதராபாத் மற்றும் மூணாரில் இறுதிக்கட்ட காட்சிகள் படமாக்கப்பட இருக்கிறது. அத்துடன் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறைவுபெற்றுவிடும் என கூறப்படுகிறது.