×

பரபரப்பு தீர்ப்பு!- ‘லியோ’ அதிகாலை காட்சிக்கு அனுமதி கோரிய வழக்கு…

 

‘லியோ’ படத்தின் அதிகாலை காட்சிக்கு அனுமதி கோரிய  வழக்கின் தீர்ப்பு தற்போது வந்துள்ளது.

 

உலகம் முழுவதுன் லியோ ஃபீவர் பரவியுள்ளது. படம்  வரும் 19ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் 24ஆம் தேதி வரை ஒரு நாளைக்கு 5 காட்சிகள் வீதம் திரையிட்டுக்கொள்ள அரசு அனுமதி வழங்கியது. காலை 9மணிக்கு முதல் காட்சி துவங்கி இரவு 1.30 மணிவர படத்தை திரையிட்டுக்கொள்ளலாம் என அரசு அனுமதி வழங்கியுள்ளது. இருந்தாலும் மற்ற மாநிலங்களில் லியோ அதிகாலை 4 மணிக்கு ,முதல் காட்சி திரையிடப்பட உள்ளதால். தமிழகத்திலும் லியோ சிறப்பு காட்சிக்கு அனுமதி வேண்டும் என பட தயாரிப்பு நிறுவனம் சார்பாக வழக்கு தொடரப்பட்டது. மேலும் அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கோரிக்கை விடுக்கப்பட்டது. நேற்று விசாரிக்கப்பட்ட இந்த வழக்கு இன்றைய தினத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று முதல் வழக்காக விசாரிக்கப்பட்டு தீர்ப்பு வெளியாகியுள்ளது.

அதன்படி 19-24ஆம் தேதி வரை காலை 7 மணி காட்சிக்கு அனுமதி வழங்கும் விவகாரத்தை தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய அரசுக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும் காலை 4மணி காட்சிக்கு அனுமதி கிடையாது என திட்டவட்டமாக கூறியுள்ளார் நீதிபதி அனிதா சுமந்த். இந்த விவகாரத்தில் இனி தமிழக அரசு என்ன முடிவு எடுக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.