×

‘KEEP CALM AND AVOID THE BATTLE’ –வெளியானது ‘லியோ’ படத்தின் புதிய போஸ்டர்.

 

லியோ படத்தின் புதிய போஸ்டர் வெளியாகி இணையத்தில் ட்ரெண்ட் அடித்து வருகிறது.

தளபதி  விஜய், இயக்குநர் லோகேஷ் கனகராஜுடன் கூட்டணி அமைத்து தயாராகிவரும் திரைப்படம் 'லியோ'. இந்த படத்தில் அவருக்கு ஜோடியா திரிஷா நடித்துள்ளார். ஆக்ஷன் அதிரடியில் உருவாகும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். படத்தில் சஞ்சய் தத், மிஸ்கின், சாண்டி மாஸ்டர், பிரியா ஆனந்த் என பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர். படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடிந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது.

இந்த நிலையில் படம் உலகம் முழுவதும் வரும் அக்டோபர் மாதம் 10ஆம் தேதி வெளியாகவுள்ளதை தொடர்ந்து தற்போது படத்தின் புது போஸ்டர் வெளியாகியுள்ளது. அதில் இடம் பெற்றுள்ள ‘KEEP CALM AND AVOID THE BATTLE’ என்ற வாசகத்தை ரசிகர்கள் இணையத்தில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். அதற்கு அர்த்த ‘அமைதியா இருங்கள் போரை தவிருங்கள்’ என்பதாகும்.