×

‘லியோ’-ல் தீயாய் பணியாற்றும் சஞ்சய் தத்... வைரலாகும் காஷ்மீர் ஷூட்டிங் புகைப்படங்கள் 

 

 விஜய் நடிப்பில் உருவாகும் ‘லியோ’ படத்தில் சஞ்சய் தத் அதிரடியாக நடித்து வரும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகும் திரைப்படம் 'லியோ'. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக திரிஷா கதாநாயகியாக நடித்து வருகிறார். இவர்களுடன் சஞ்சய் தத், கௌதம் மேனன், மிஷ்கின், அர்ஜூன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்திற்கு அனிரூத் இசையமைத்து வருகிறார். 

இந்த படம் ஆயுதப்பூஜையையொட்டி வரும் அக்டோபர் மாதம் 19-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி படத்தின் படப்பிடிப்பு திட்டமிட்டபடி நடைபெற்று வருகிறது. முதலில் கொடைக்கானல் தொடங்கிய இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்து காஷ்மீரில் விரைவாக நடைபெற்று வருகிறது. இதில் விஜய் நடிக்கும் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. 

தற்போது இந்த படத்தின் காஷ்மீர் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. சமீபத்தில் இந்த படப்பிடிப்பில் சஞ்சத் தத் இணைந்தார். அவரின் மிரட்டலான காட்சிகளை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இது குறித்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது.