×

திரிஷாவுடன் மிரட்டலான லுக்கில் விஜய்... 'லியோ' செம்ம அப்டேட் !

 

நடிகை திரிஷாவுடன் நடிகர் விஜய் மிரட்டல் லுக்கில் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் 'லியோ' திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்திற்கு அனிரூத் இசையமைத்து வருகிறார்.  இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக திரிஷா கதாநாயகியாக நடித்து வருகிறார். இவர்களுடன் சஞ்சய் தத், கௌதம் மேனன், மிஷ்கின், அர்ஜூன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். 

இந்த படம் ஆயுதப்பூஜையையொட்டி வரும் அக்டோபர் மாதம் 19-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  இதையொட்டி படத்தின் படப்பிடிப்பு திட்டமிட்டபடி நடைபெற்று வருகிறது. முதலில் கொடைக்கானல் தொடங்கிய இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்து காஷ்மீரில் விரைவாக நடைபெற்று வருகிறது. இதில் விஜய் நடிக்கும் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. 

இந்த படப்பிடிப்பில் கடும் குளிரிலும் 500-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பணியாற்றி வருகின்றனர். அதே நேரம் இன்று நடிகர் விஜய் காஷ்மீர் படப்பிடிப்பிலிருந்து திரும்பி வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதை உறுதி செய்யும் விதமாக  விமான நிலையத்தில் விஜய் வந்த காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலானது. இந்நிலையில் நடிகை திரிஷாவுடன் விஜய் மிரட்டலான லுக்கில் இருக்கும்புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது. இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.