நாளை லியோ ரிலீஸ்... ராமேஸ்வரத்தில் லோகேஷ் சாமி தரிசனம்...
Oct 18, 2023, 09:08 IST
லியோ திரைப்படம் நாளை வெளியாக இருப்பதால், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள ‘லியோ’ திரைப்படம், உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வரும் நாளை வெளியாகவுள்ளது. இந்த படத்தில் அர்ஜுன், த்ரிஷா, சஞ்சய் தத் மற்றும் திரைப்பட இயக்குநர்கள் மிஷ்கின், கௌதம் மேனன் உள்ளிட்ட பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைக்க, படத்தை செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ தயாரித்துள்ளது.
இந்நிலையில், நாளை திரைப்படம் வெளியாக இருப்பதால், இயக்குநர் லோகேஷ் கனகராஜ், ரத்னகுமார் உள்பட படக்குழுவினர் அனைத்து பேரும் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்துள்ளனர்.