×

ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் விடுதலை திரைப்படம்

 

வித்தியாசமான கதைக்களத்தில் வெற்றிமாறன் இயக்கியிருந்த திரைப்படம் ‘விடுதலை’. எழுத்தாளர் ஜெகன்மோகனின் ‘துணைவன்’ என்ற சிறுகதையை அடிப்படையாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இரு பாகங்களாக உருவாகியுள்ள இந்த படத்தில் சூரி மற்றும் விஜய் சேதுபதி முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. மக்களுக்கான போராடுகிற பெருமாள் வாத்தியரை உயிரோடவோ, பிணமாகவோ பிடிக்க போலீஸ் நடத்துற ஆபரேஷன் தான் விடுதலை. இருபாகங்களாக வெளியாகும் என அறிவிக்கப்பட்ட இந்த படத்தின் படப்பிடிப்பு முன்னரே முடிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. 

இந்நிலையில், விடுதலை படத்தின் இரண்டு பாகங்களும் ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவின் லைம்லைட் பிரிவில் திரையிட தேர்வாகி உள்ளதாக படக்குழு சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.