×

விஜய் தொடங்கும் கட்சியில் லோகேஷூக்கு ஒரு அமைச்சர் பதவி உறுதி

 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள ‘லியோ’ திரைப்படம் கடந்த 19-ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. இந்த படத்தில் அர்ஜூன், த்ரிஷா, சஞ்சய் தத், ப்ரியா ஆனந்த், மற்றும் திரைப்பட இயக்குநர்கள் மிக்ஷின், கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பிரபலங்கள் நடித்துள்ளனர். அனிருத் இசையமைக்க, செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ தயாரித்துள்ளது. முதல் நாளில் 148 கோடி ரூபாய் வசூலித்த லியோ திரைப்படம், தற்போது 600 கோடிக்கு மேல் வசூல் ஈட்டியுள்ளது. நடப்பு வருடத்தில் முதல் நாளிலேயே 140 கோடி வசூலித்த முதல் திரைப்படம் லியோ என்ற பெருமையும் கிடைத்துள்ளது. 

இந்நிலையில், படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக சென்னையில் வெற்றி விழா நடைபெற்றது. இதில், நடிகர் விஜய் உள்பட படக்குழுவினர் அனைவரும் பங்கேற்றனர். அப்போது, பேசிய விஜய் கட்சி தொடங்கி அதில் லோகேஷ் கனகராஜ் வந்து சேர்ந்தால், அவருக்கு போதைப்பொருள் தடுப்பு பிரிவு அமைச்சர் பதவி வழங்கப்படும் என்று நகைச்சுவையாக கூறினார்.