லோகேஷ் கனகராஜ் உதவி இயக்குனரா பிக்பாஸ் மாயா? எந்த படத்தில் தெரியுமா?
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான ’விக்ரம்’ மற்றும் ‘லியோ’ ஆகிய திரைப்படங்களில் ஒரு சில காட்சிகளில் பிக்பாஸ் மாயா நடித்திருப்பார் என்பது தெரிந்தது. ஆனால் அவர் லோகேஷ் கனகராஜ் உதவி இயக்குனராகவும் பணிபுரிந்து உள்ளதாக அவர் தனது சமூக வலைதளத்தில் அறிவித்துள்ளார் என்பது ரசிகர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.
தளபதி விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான ‘லியோ’ திரைப்படம் வெளியாகி ஒரு ஆண்டு கொண்டாட்டம் சமீபத்தில் கொண்டாடப்பட்ட நிலையில், இது குறித்து மாயா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நெகிழ்ச்சியான ஒரு பதிவை செய்துள்ளார்.
அந்த பதிவில், லோகேஷ் கனகராஜ் அவர்களின் உதவி இயக்குனராக பணிபுரிந்தது மிகவும் பெருமையாக இருந்ததாக கூறியுள்ளார். மேலும் அன்பு அண்ணன் லோகேஷ் கனகராஜ் அவர்கள் இந்த அற்புத பயணத்திற்கு வாய்ப்பு தந்ததற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
என் அன்பான தளபதியுடன் நான் கொண்ட உரையாடல், அவருடன் பகிர்ந்த சில தருணங்கள் என் மனதில் ஆழமாக உள்ளன. அதற்கும் நான் நன்றி செலுத்துகிறேன். மேலும் என் வாழ்க்கையில் சஞ்சய் தத் அவர்களை அறிமுகம் செய்ததற்கும் நன்றி. அவரிடமிருந்து பெற்ற அறிவுரைகள் மற்றும் பகிர்ந்த புகைப்படங்கள் மதிப்புடையதாக உள்ளன. அவரை நான் ஒரு தந்தையாகவே பார்க்கிறேன்.
என் மீது நம்பிக்கை வைத்து என்னை ஒரு நடிகையாகவும், உங்கள் உதவி இயக்குனராகவும் ஏற்றுக்கொண்டதற்கு நான் மிகவும் நன்றி செலுத்துகிறேன் என்று மாயா பதிவு செய்துள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வருகிறது.