×

மன்சூர் அலிகான் பேச்சுக்கு லோகேஷ் கனகராஜ் கண்டனம்

 

நடிகர் மன்சூர் அலிகான், 30 ஆண்டுகளுக்கும் மேலாக திரை துறையில் பணியாற்றி வருகிறார். சில படங்களில் ஹீரோவாகவும் பல திரைப்படங்களில் துணை நடிகராகவும், வில்லனாகவும் நடித்திருக்கிறார். இந்நிலையில் சில காலமாக மன்சூர் அலிகான், தமிழ் சினிமாவில் காமெடியானாகவும், சிறு சிறு கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வருகிறார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படம் கடந்த அக்டோபர் 19ஆம் தேதி வெளியானது. லியோ படத்தில் விஜய், சஞ்சய்தத், அர்ஜுன், கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதில் விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடித்திருந்தார். விஜய்யும் திரிஷாவும் நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் லியோ படத்தில் இணைந்துள்ளனர். லியோ படத்தில் மன்சூர் அலிகானும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். படத்தில் மன்சூர் அலிகானுக்கு ஒரு சில காட்சிகளும் மட்டுமே இருக்கும்.

இந்நிலையில், மன்சூர் அலிகான் த்ரிஷா குறித்து பேசியதற்கு கடும் கண்டனம் எழுந்து வருகிறது. லியோவில் த்ரிஷா என்றால் கட்டாயம் பெட்ரூம் சீன் இருக்கும், ஆனால் த்ரிஷாவை கண்ணுல காட்டவே இல்லை என்று அநாகரீகமாக அவர் பேட்டி ஒன்றில் பேசியிருந்தார். இதற்கு த்ரிஷா கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜூம் இதற்கு கண்டனம் தெரிவித்து பதிவிட்டுள்ளார். மன்சூரின் பேச்சை வன்மையாக கண்டிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.