ரெட்ரோ நிகழ்வில் 'ரோலக்ஸ்' பட அப்டேட் கொடுத்த லோகேஷ் கனகராஜ்...!
ரெட்ரோ நிகழ்வில் 'ரோலக்ஸ்' படம் குறித்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அப்டேட் கொடுத்துள்ளார்.
சூர்யா நடிப்பில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் இன்று ரெட்ரோ திரைப்படம் வெளியாகி உள்ளது. ரசிகர்கள் கொண்டாட்டத்திற்கு மத்தியில் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இப்பட ரிலீசை முன்னிட்டு சூர்யா ரசிகர் மன்றம் சார்பில் 10 ஆயிரம் பேருக்கு உணவு வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.இந்த நிகழ்வில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய லோகேஷ், 10 ஆயிரம் பேருக்கு உணவு வழங்குகிறார்கள். இது நல்ல விஷயம். இதில் எனது பங்கும் இருக்க வேண்டும் என்று தான் நான் இங்கு வந்துள்ளேன். ரெட்ரோ படத்திற்கு நான் இரவு காட்சிக்கு டிக்கெட் எடுத்து வைத்துள்ளேன். படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.
கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படத்தில் இறுதி காட்சியில் ரோலக்ஸ் எனும் அசுரத்தனமான வில்லன் வேடத்தில் நடிகர் சூர்யா நடித்து இருந்தார். அது ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெறவே, அந்த கதாபாத்திரத்தை வைத்து ரோலக்ஸ் எனும் பெயரில் தனி படமாக எடுக்க இயக்குனர் லோகேஷ் கனகராஜ் திட்டமிட்டுள்ளார் எனக் கூறப்படுகிறது.