×

  ப்ளடி பெக்கர் படக்குழுவை பாராட்டிய லோகேஷ் கனகராஜ்

 
இயக்குநர் நெல்சன் தயாரிப்பில் கவின் நடித்துள்ள படம் `ப்ளடி பெக்கர்.' இந்தப் படத்தை அறிமுக இயக்குநரான சிவபாலன் முத்துகுமார் இயக்கியுள்ளார். ஜென் மார்டின் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படத்தில் கவின் பிச்சைக்காரனாக ஒரு மாறுபட்ட தோற்றத்தில் நடித்துள்ளார். திரைப்படம் தீபாவளி அன்று வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. திரைப்படத்தை பார்த்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் படக்குழுவை பாராட்டியுள்ளார். அதில் அவர் " எனக்கு பிளடி பெக்கர் திரைப்படம் மிகவும் பிடித்து இருந்தது. அதில் வரும் நகைச்சுவை காட்சிகள் எனக்கு மிகவும் வொர்க் அவுட் ஆனது. இப்படம் ஒரு புதிய முயற்சி. வெளிநாட்டு திரைப்படங்களில் இம்மாதிரியான திரைப்படங்கள் பார்த்ததுண்டு. ஆனால் தமிழ் சினிமாவில் இதுதான் முதல்முறை. தயாரிப்பாளர் நெல்சனுக்கு வாழ்த்துக்கள். கவின் அருமையாக நடித்து இருந்தார் அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள், ரெடிங் கிங்ஸ்லி மற்றும்  திரைப்பட குழுவிற்கு எனது வாழ்த்துக்கள்" என கூறினார்.