×

லோகேஷ் கனகராஜூக்கு நிலுவையில் சம்பளம்

 

நடிகர் விஜய், இயக்குநர் லோகேஷ் கனகராஜுடன் கூட்டணி அமைத்து தயாராகி வரும் திரைப்படம் 'லியோ'. இந்த படத்தில் அவருக்கு ஜோடியா திரிஷா நடித்துள்ளார். ஆக்ஷன் அதிரடியில் உருவாகும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். படத்தில் சஞ்சய் தத், மிஸ்கின், சாண்டி மாஸ்டர், பிரியா ஆனந்த் என பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். லியோ படத்திலிருந்து 3 பாடல்கள் மற்றும் முன்னோட்டம் ஏற்கனவே வெளியாகி உள்ளன. கடந்த 19-ம் தேதி உலகம் முழுவதும் இத்திரைப்படம் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. முதல் நாளிலேயே 400 கோடி ரூபாய் வசூலித்த லியோ திரைப்படம் 7 நாட்களில் 500 கோடி ரூபாய்க்கு மேல் உலகம் முழுவதும் வசூல் ஈட்டியது. 

இந்நிலையில், லியோ படத்திற்கான சம்பளத்தை முழுமையாக லோகேஷ் கனகராஜுக்கு தயாரிப்பு நிறுவனம் வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. படத்தின் பின்னணி பணியின்போது, லோகேஷ் கனகராஜ் படத்திலிருந்து விலகியதாக அப்போதே சர்ச்சை கிளம்பியது. தற்போது லோகேஷூக்கு சம்பளம் நிலுவையில் இருப்பதாக வெளியான தகவல் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.