×

இணையத்தைக் கலக்கிய லாஸ்லியாவின் எவர் க்ரீன் போட்டோஷூட்!

பிக்பாஸ் லாஸ்லியா பச்சை நிறத்தில் ஜொலிக்கும் ரீசன்ட் போட்டோஷூட் இணையத்தில் வைரலாகி வருகிறது. இலங்கை செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றிய லாஸ்லியா பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்ட பின்னர் தமிழ் ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டார். ஓவியாவுக்கு அடுத்து லாஸ்லியாவுக்கு தான் ஆர்மி உருவாக்கியதென்றால் அவரது பாப்புலாரிட்டி உங்களுக்குத் தெரிந்திருக்கும். கவின்-லாஸ்லியா நட்பு தான் உலக பேமஸ். அதனால் தான் ரசிகர்கள் இவர்கள் கூட்டணியை கவிலியா என்று செல்லமாக அழைக்கின்றனர். பேமஸ்
 

பிக்பாஸ் லாஸ்லியா பச்சை நிறத்தில் ஜொலிக்கும் ரீசன்ட் போட்டோஷூட் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இலங்கை செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றிய லாஸ்லியா பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்ட பின்னர் தமிழ் ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டார். ஓவியாவுக்கு அடுத்து லாஸ்லியாவுக்கு தான் ஆர்மி உருவாக்கியதென்றால் அவரது பாப்புலாரிட்டி உங்களுக்குத் தெரிந்திருக்கும். கவின்-லாஸ்லியா நட்பு தான் உலக பேமஸ். அதனால் தான் ரசிகர்கள் இவர்கள் கூட்டணியை கவிலியா என்று செல்லமாக அழைக்கின்றனர்.

பேமஸ் ஆக்கியாச்சு. அப்புறம் என்ன! ஹீரோயின் தான். ‘பிரண்ட்ஷிப்’ என்ற படத்தில் ஹர்பஜன் சிங்கை ரொமான்ஸ் செய்ய வருவதன் மூலம் நடிகை என்று முத்திரை பதிக்கவுள்ளார். இதனைத் தொடர்ந்து நடிகர் ஆரியுடன் புதிய படமொன்றிலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

லாஸ்லியா ஆர்மி இப்போதும் கூட ஆக்டிவ் ஆகத்தான் உள்ளார்கள். அவரது புகைப்படங்கள் இணையத்தில் வெளியானால் போதும் ட்ரிக்கர் ஆகி விடுவார்கள்.

தாமரை நிறைந்த குட்டை முன்பு அல்லி மலர் போல் ஆர்ப்பரிக்கும் அழகுடன் பச்சை நிற ஆடியில் மின்னுகிறார் லாஸ்லியா. இந்த போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.