×

மயக்கும் லுக்கில் இவானா ... லவ் டுடே அசத்தல் புகைப்படங்கள் !

 

'லவ் டுடே' படத்தின் நாயகி இவானாவின் அசத்தல் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. 

 

தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக இருப்பவர் இவானா. பாலாவின் 'நாச்சியார்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இந்த படத்தில் சிறிய கதாபாத்திரம் என்பதால் பெரிய அளவில் ரசிகர்களை அவர் கவரவில்லை. இதையடுத்து சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த 'லவ் டுடே' படத்தில் கதாநாயகியாக இவானா நடித்திருந்தார். இந்தப் படத்தின் மூலம் ஓவர் நைட்டில் மிகவும் பிரபலமான கதாநாயகியாக இவானா மாறிவிட்டார். 

பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் வெளியான இப்படம் வெறும் 4 கோடி பட்ஜெட் எடுக்கப்பட்டு 50 கோடி வசூல் சாதனை படைத்தது. இதில் இவானாவின் கதாபாத்திரம் ரசிகர்களின் மனதில் நிலைத்து நிற்கிறது. உண்மையான பெயரை கூட மறந்து இவானாவை நிகிதா என்றே ரசிகர்கள் அழைத்து வருகின்றனர். 

இந்நிலையில் க்யூட் லுக்கில் இருக்கும் புகைப்படங்களை இவானா வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. 

 

​​​​​