×

மெகா ஹிட்டான ‘லப்பர் பந்து’ ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

 

அட்டகத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண் நடிப்பில் மெகா ஹிட்டான ‘லப்பர் பந்து’ திரைப்படம் வரும் அக்டோபர் 31ஆம் தேதி ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகிறது. தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் அட்டகத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண் உள்ளிட்ட பலர் நடித்த திரைப்படம் ‘லப்பர் பந்து’. கிரிக்கெட்டை மையமாக கொண்டு உருவான இத்திரைப்படம் இந்த வருடம் பாக்ஸ் ஆபிஸில் அதிக வசூல் செய்து சாதனை படைத்த படங்கள் வரிசையில் இடம்பெற்றுள்ளது.

கடந்த செப்டம்பர் 20ஆம் தேதி வெளியான ’லப்பர் பந்து’ திரைப்படம், குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு 50 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. எப்போதும் போல ஒரு கிரிக்கெட் போட்டியை பற்றிய திரைப்படம் என நினைத்து படத்தை பார்த்த ரசிகர்களுக்கு, விறுவிறுப்பான அதே சமயத்தில் நகைச்சுவை கலந்த திரைப்படமாக அமைந்தது. இப்படத்தில் மாமனார், மாப்பிள்ளையாக அட்டகத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண் நடிப்பு பெரும் வரவேற்பைப் பெற்றது.

 
இந்நிலையில் லப்பர் பந்து திரைப்படம் ஓடிடியில் கடந்த அக்டோபர் 18ஆம் தேதி வெளியாவதாக தகவல் வெளியான நிலையில், தியேட்டர்களில் நன்றாக ஓடி வருவதால் ஓடிடி ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது. இதனையடுத்து வரும் தீபாவளி பண்டிகைக்கு அக்டோபர் 31ஆம் தேதி லப்பர் பந்து திரைப்படம் ஹாஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. லப்பர் பந்து திரைப்படம் ஓடிடியில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாகிறது.