×

பொய்யான தகவல்களை நம்ப வேண்டாம் : லைகா நிறுவனம் 

 

தென்னிந்திய திரையுலகில் முன்னணி படத்தயாரிப்பு நிறுவனம் லைகா. பல்வேறு பெரிய பட்ஜெட் படங்களை தயாரித்து வருகிறது. இந்த நிலையில், லைகா நிறுவனத்தின் புதிய படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு வழங்குவதாக கூறும் தகவல்களை நம்ப வேண்டாம் என்று லைகா நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. இது தொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "லைகா புரொடக்ஷன்ஸில் நடிக்க வாய்ப்பு தருவதாக பலர் அதிகாரப்பூர்வமற்ற முறையில் அழைப்புகளை விடுப்பது எங்கள் கவனத்திற்கு வந்துள்ளது. லைகா தயாரிக்கும் படங்களில் நடிக்கும் வாய்ப்பு அல்லது ஆடிஷன் பற்றிய அறிவிப்புகள் எங்களது அதிகாரப்பூவ சமூக வலைதள பக்கங்களில் வெளியாகும்." "நாங்கள் அறிவிக்காத ஆடிஷன் மற்றும் வாய்ப்பு வழங்குவதாக கூறும் தகவல்களை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்கிறோம். லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் மேற்கொள்ளப்படும் கேஸ்டிங் அழைப்புகள் மற்றும் ஆடிஷன்களுக்கு அழைப்பு விடுக்கும் மூன்றாம் தரப்பினர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை அறிந்து கொள்ளுங்கள். எச்சரிக்கையாக இருங்கள்," என்று தெரிவித்துள்ளது