பிரபல நிறுவனத்துடன் கைகோர்க்கும் லைகா புரொடக்ஷன்ஸ்...!
லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் பிரபல நிறுவனத்துடன் கைகோர்த்து புதிதாக 9 படங்கள் தயாரிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களில் மிகப் பிரம்மாண்டமான, அதிக பொருட்செலவில் தயாரான படங்கள் வரக் காரணமாக இருந்த நிறுவனம் லைகா புரொடக்ஷன்ஸ். தமிழில் '2.0, பொன்னியின் செல்வன் 1, 2' ஆகிய இரு பெரும் படங்கள் அதற்கு ஓர் உதாரணம். அவை மட்டுமல்லாது மேலும் சில படங்களை இணைந்து தயாரித்தும், தனியாக தயாரித்தும் இருக்கிறார்கள்.
இதனிடையே, அவர்கள் கடைசியாகத் தயாரித்து வெளிவந்த 'லால் சலாம், இந்தியன் 2, வேட்டையன், விடாமுயற்சி' ஆகிய படங்கள் எதிர்பார்த்த வசூலைப் பெறவில்லை. வசூலிலும், வரவேற்பிலும் கூட தோல்விப் படங்களாகவே அமைந்தன. மலையாளத்தில் அவர்கள் இணைந்து தயாரித்த 'எல் 2 எம்புரான்' படத்திலிருந்து கடைசி நேரத்தில் விலகிக் கொண்டதாகவும் சொன்னார்கள். ஆனாலும், பெயரளவில் அவர்களது பெயர் பட விளம்பரங்களில் இடம் பெற்றது. அதனால், அந்த நிறுவனத்தைப் பற்றி பல்வேறு வதந்திகள் சில வாரங்களாக சுற்றி வந்தன. இந்நிலையில் அவற்றிற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சில புதிய தகவல்கள் கோலிவுட்டில் வெளியாகி உள்ளன.