×

ஆக்சன் கிங்கிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த விடாமுயற்சி படக்குழு

 

மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி என்ற திரைப்படத்தில் அஜித்குமார் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார். அஜித் நடிக்கும் 62 - வது படமாக இது உருவாகி வருகிறது.  இப்படத்தில் வில்லனாக ஆக்சன் கிங் அர்ஜுன் மற்றும் ஆரவ் நடிக்கின்றனர். இவர்களுடன் நடிகைகள் ரெஜினா கசாண்ட்ரா, பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இப்படத்தை 'லைகா' நிறுவனம் சார்பில் சுபாஸ்கரன் தயாரிக்கிறார்.அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடைபெற்றது. இதுதவிர பல்வேறு பகுதிகளிலும் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. நடிகர் அஜித் பர்ஸ்ட் லுக் போஸ்டரை தொடர்ந்து ஆக்சன் கிங் அர்ஜுன் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் படக்குழு வெளியிட்டிருந்தது. அதனை தொடர்ந்து ஆரவ், ரெஜினா கசாண்ட்ரா பர்ஸ்ட் லுக் போஸ்டர்களை படக்குழு வெளியிட்டிருந்தது. இந்நிலையில் நடிகர் அர்ஜுனின் பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு படக்குழு வாழ்த்து தெரிவித்துள்ளது. அப்டேட் விடாமல் இருந்து வந்த விடாமுயற்சி படக்குழு தற்போது அடிக்கடி அப்டேட் கொடுத்து வருவதால் அஜித் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.