மெய்யழகன் படத்தின் 'வெறி' பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியீடு
Sep 15, 2024, 13:30 IST
96 பட இயக்குநர் பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்துள்ள படம் மெய்யழகன். 'கார்த்தியின் 27'-வது படமான இந்த படத்தை சூர்யா- ஜோதிகாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ளது. இப்படத்தில் அரவிந்த்சாமி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் ஸ்ரீதிவ்யா, ராஜ்கிரண் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் செப்டம்பர் 27 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. அண்மையில் படத்தின் டீசர் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தற்பொழுது நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில் மெய்யழகன் படத்தில் ஜல்லிக்கட்டை மையமாக கொண்ட 'வெறி' பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகியுள்ளது.