×

கவிஞர் நா .முத்துக்குமார் பொன்விழா -கமலஹாசன் பங்கேற்கிறார் 

 
காலம்சென்ற கவிஞர் நா.முத்துக்குமாரின் 50-வது ஆண்டு பொன்விழாவை, தமிழ் திரையுலகம் சார்பில் கொண்டாட முடிவு செய்துள்ளனர். 
தங்க மீன்கள் படத்தில் இடம்பெற்ற ஆனந்த யாழை மீட்டுகிறாய், சைவம் படத்தில் இடம்பெற்ற அழகே அழகே ஆகிய பாடல்களுக்காக தொடர்ந்து இரண்டு முறை தேசிய விருது வென்ற கவிஞர் முத்துக்குமார் பல ஆயிரம் பாடல்களை எழுதியுள்ளார் .பல விருதுகளை வென்ற அவர் 2016ம் ஆண்டு காலமானார் 
திரைத்துறைக்கு கவிஞர் நா.முத்துக்குமார் அளித்த பங்களிப்பை போற்றும் வகையில் அவருக்கு நடத்தப்படவுள்ள பாராட்டு விழாவில் பங்கேற்கும் திரை பிரபலங்கள் பட்டியலை சமீபத்தில் வெளியிட்டனர் 
இந்த பொன் விழாவில் இசையமைப்பாளர்கள் யுவன் சங்கர் ராஜா, ஜி.வி.பிரகாஷ், ஹாரிஸ் ஜெயராஜ், தமன், சந்தோஷ் நாராயணன், விஜய் ஆண்டனி, கார்த்திக் ராஜா மற்றும் நிவாஸ் கே.பிரசன்னா, மற்றும் பல திரை பிரபலங்கள் பங்கேற்கவுள்ளனர் 
இப்பொன் விழாவில் சிறப்பு விருந்தினர்களாக உலக நாயகன்  கமல்ஹாசன்,பங்கேற்கவுள்ளது குறிப்பிடத்தக்கது  
அவருடன் நடிகர்கள் விக்ரம், சூர்யா, தனுஷ், சிம்பு, ரவி மோகன், சிவகார்த்திகேயன் உள்ளிட்டோரும் கலந்துகொள்கிறார்கள். இந்த பொன் விழா சென்னையில் ஜூலை 19-ந்தேதி நேரு ஸ்டேடியத்தில்  நடைபெற உள்ளது .