×

10 மில்லியன் வியூஸ்களை கடந்த 'மாமன்னன்' டிரெய்லர்... படத்திற்கு எகிறும் எதிர்பார்ப்பு ! 

 

 உதயநிதியின் 'மாமன்னன்' திரைப்படத்தின் டிரெய்லர் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது. 

நடிகர் உதயநிதி மாறுப்பட்ட கதைக்களத்தில் நடித்துள்ள திரைப்படம் 'மாமன்னன்'. அரசியல் மற்றும் த்ரில்லரில் உருவாகியுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாகவுள்ளது. இந்த படம் வரும் ஜூன் 29-ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ளது. 

இந்த படத்தில் உதயநிதியுடன் இணைந்து வடிவேலு மற்றும் பகத் பாசில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்னர். இந்த படத்தில் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். உதயநிதியின் சொந்த நிறுவனமான ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரித்து வரும் இப்படம் ஜூன் மாதம் ரிலீசாகவுள்ளது.

சமீபத்தில் இப்படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டது. வித்தியாசமான தோற்றத்தில் வடிவேலுவுடன் இணைந்து உதயநிதி நடித்துள்ளார். இந்த டிரெய்லருக்கு ரசிகர்கள் மிகுந்த வரவேற்பை கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லர் யூடியூப்பில் புதிய சாதனை படைத்துள்ளது. டிரெய்லர் வெளியாகி சில நாட்களிலேயே 10 மில்லியன் பார்வையாளர்கள் பார்த்துள்ளனர். இது படத்திற்கான எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.  ‌