×

உதயநிதிக்கு தந்தையான வடிவேலு... ‘மாமன்னன்’ படத்தின் முக்கிய அப்டேட் 

 

‘மாமன்னன்’ படத்தில் வடிவேலு கதாபாத்திரம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. 

‘நெஞ்சுக்கு நீதி’ படத்திற்கு பிறகு உதயநிதியின் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘மாமன்னன்‘. வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தை மாரி செல்வராஜ் இயக்கி வருகிறார். மாரி செல்வராஜின் திரைப்படங்களான பரியேறும் பெருமாள், கர்ணன் ஆகிய இரண்டு திரைப்படங்களும் சமூக அவலங்கள் குறித்து பேசுபவை.

அந்த வகையில் இந்த படமும் வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகி வருகிறது. உதயநிதியின் சொந்த நிறுவனமான ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரித்து வரும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வருகிறார். இந்த படத்தில் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். இதுதவிர பகத் பாசில், வடிவேலு ஆகிய இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

ஆனால் வடிவேலு எந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது குறித்து இதுவரை தகவல் வெளியாகவில்லை. இந்நிலையில் நடிகர் வடிவேலு கதாநாயகன் உதயநிதிக்கு தந்தையான நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பல முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்துள்ள வடிவேலு இதுவரை தந்தை கதாபாத்திரத்தில் நடித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

கடந்த சில மாதங்களுக்கு முன்பு சேலம் சுற்று வட்டார பகுதிகளில் தொடங்கிய இந்த படப்பிடிப்பு இன்றுடன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதையடுத்து விரைவில் தயாரிப்பு பணிகள் தொடங்கவுள்ளது.