×

‘மாமன்னன்’ திரைப்படம் என்னுடைய கடைசிப்படம்... இசை வெளியீட்டு விழாவில் உதயநிதி பேச்சு !

 

‘மாமன்னன்’ திரைப்படம் தான் என்னுடைய கடைசி படம் என்று உதயநிதி தெரிவித்துள்ளார். 

மாரி செல்வராஜ் மற்றும் ஏ.ஆர்.ரகுமான் கூட்டணியில் முதல்முறையாக நடித்துள்ளேன். இதுதான் என்னுடைய கடைசி படம். இந்த படத்தில் வடிவேலு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதுபோன்று பெரிய குழுவினரிடம் பணியாற்றியது மகிழ்ச்சி அளிக்கிறது. மாரி செல்வராஜ் படத்தில் என்ன எதிர்பார்ப்பீர்களோ அதெல்லாம் இருக்கிறது. 

'மாமன்னன்' படத்தை வரும் ஜூன் 29-ஆம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளோம். கமல் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்கவிருந்தோம். ஆனால் அதற்குள் அமைச்சர் கொடுத்ததால் படங்கள் நடிக்க முடியாமல் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. நிறைய வேலை இருக்கிறது. எதிர்பார்ப்பு கூடிக்கொண்டே போகிறது. கடுமையான பணி சூழல்களுக்கிடையே டப்பிங் மற்றும் இசை வெளியீட்டுக்கு நேரம் ஒதுக்கினேன். இது நல்ல படமாக அமைந்தது திருப்தியாக உள்ளது. 

இந்த படத்திற்காக நானும், மாரி செல்வராஜூம் நிறைய பேசினோம். இந்த படத்தில் மாரி செல்வராஜின் அரசியல் அதிகமாக இருக்கும். நான் அடுத்து படம் நடித்தால் என்னுடைய இயக்கத்தில் தான் நடிக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அடுத்த 3 வருடத்திற்கு படம் நடிக்க மாட்டேன். அதன்பின்பு தெரியவில்லை. அதை மக்கள் தான் முடிவு செய்யவேண்டும். அதேநேரம் அடுத்து படம் நடித்தால் உங்கள் இயக்கத்தில் தான் நடிப்பேன் என்று மாரி செல்வராஜிடம் கூறியுள்ளேன் என்றார்.