உலக அளவில் கவனம் ஈர்த்த ‘மாமன்னன்’ – கொண்டாடி தீர்க்கும் ரசிகர்கள்.
இயக்குநர் மாரிசெல்வராஜ் இயக்கத்தில் வெளியான மாமன்னன் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிய இந்த படம் ஓடிடி தளமான நெட்பிளிக்ஸில் கடந்த மாதம் 27ஆம் தேதி வெளியாகி, வெளியான நாள் முதல் தொடர்ந்து டிரெண்டிகில் முதலிடம் பிடித்தது. இந்த நிலையில் படம் இந்தியா கடந்து உலக அளவில் டாப் 10 பட்டியலில் இடம் பிடித்துள்ளது. தொடர்ந்து பல சாதனைகளை படைத்துள்ளது.
அதன்படி ஃபகத் பாசிலின் முரட்டு வில்லதனம், வடிவேலுவின் அசத்தலான நடிப்பு என வெளியான மாமன்னன் உலக அளவில் டாப் பத்து இடங்களில் ஒன்பதாவது இடத்தை பிடித்துள்ளது. அதுமட்டுமல்லமல் இந்தியா, கதார், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய மூன்று நாடுகளில் முதலிடத்தையும், பக்ரைன், மலேசியா, மாலதீவு, ஓமன், சிங்கப்பூர், ஸ்ரீ லங்கா ஆகிய ஆறு நாடுகளில் டாப் பத்து இடத்தை பிடித்துள்ளது. வெளியான ஒரே வாரத்தில் சுமார் 1.2 மில்லியன் பார்வையாளர்களையும் படம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த தகவலை இயக்குநர் மாரிசெல்வராஜ் தனது சமூகவலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ரசிகர்கள் தொடர்ந்து வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.